Friday, August 26, 2016

முரண்



கதை சொலல் எனக்கு மிகவும் பிடித்த அனுபவம். அனுபவித்து, உருவகித்துக் குழந்தைக்குக் கதை சொல்லும் போது, குழந்தையின் கண் உருட்டல்களும், முக பாவனைகளும் காண அலாதியாய் இருக்கும்.  கருத்துக்கள், வாழ்க்கைப் பாடங்கள் சொல்லிக் கொடுக்க அருமையான தளம், கதைகள். ஆகையால், என் மகனுக்கு விபரம் புரிய ஆரம்பித்தது முதல் கதை சொல்லி வருகிறோம். போன வாரத்தில் ஒரு நாள் பேராசை பெரும் நஷ்டம் என நெறிக் கூறும் கோழி தங்க முட்டை இட்ட கதை. 

“ஒரு ஊரில ஒரு farmer தாத்தாவும், பாட்டியும் சின்ன தோட்டம் வெச்சி, அதுல எல்லா fruits, vegetables, baby chicken, baby ducks, cows, goat எல்லாம் வளத்தாங்கலாம். ஒரு நாள் தாத்தா பாட்டி கிட்ட, ‘நான் market போய்ட்டு வர்றேன்’ னு சொல்லிட்டுக் கெளம்பினாறாம். பாட்டி, ‘நானும் வர்றேன் தாத்தா’ னு சொன்னாங்க. சரின்னு தாத்தா சொல்ல, தாத்தாவும் பாட்டியும் market க்கு போனாங்க. அங்க நெறைய things இருந்தது. சில கடைல காய்கறி, சில கடைல பழங்கள், சில கடைல ஆடு, மாடு, கோழிக் குஞ்சு எல்லாம் இருந்தது. கொழந்தைங்க வெளயாட்ரதுக்கு ராட்டினம், ஊஞ்சல் எல்லாம் கூட இருந்தது. பாட்டிக்கும், தாத்தாவுக்கும் அந்த மார்கெட் ரொம்ப பிடிச்சிருந்தது. சந்தோசமா சுத்தி வந்தாங்க. அப்டி வரும்போது பாட்டி ஒரு baby chick பாத்தாங்க. Golden color feathers ஓட பாக்கவே அழகா இருந்தது.” சொல்லிட்டு இருக்கும்போது அவன் இடைமறித்தான், “அம்மா, Golden color இல்ல, gold and silver color”. “OK da, gold and silver color feathers. பாட்டி, தாத்தா கிட்ட, ‘தாத்தா, இந்த baby chick ரொம்ப அழகா இருக்குது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நம்ம இத வீட்டுக்கு கூட்டிட்டுப் போய், வளக்கலாமா’ னு கேட்டாங்க. தாத்தாவும் ok சொல்லிட்டு, அத 2௦௦௦ ரூபாய் குடுத்து வாங்கிட்டாங்க. ரெண்டு பெரும் மம்மு சாப்டு, கோழிக் குஞ்சிய கூட்டிட்டு வீட்டுக்கு போனாங்க.

பாட்டி அந்த குஞ்சிய ரொம்ப செல்லமா வளத்தாங்க. Daily, grains, worms, seeds எல்லாம் போட்டு, அத regular ஆ clean பண்ணி, பாசமா பாத்துக்கிட்டாங்க. chick big-ஆ, big-ஆ வளந்துட்டே இருந்தது. ஒரு Monday அந்த chick ஒரு egg lay பண்ணுச்சு. பாட்டி அந்த egg-அ எடுத்துப் பார்த்து, பயங்கரமா surprise ஆகிட்டாங்க. அது golden color ல இருந்தது. இல்ல, அதோட feathers மாதிரியே, gold and silver color ல இருந்தது. பாட்டி அந்த egg எடுத்திட்டுத் தாத்தா கிட்ட போய் காமிச்சாங்க. தாத்தாவும் happy ஆகிட்டாங்க. பாட்டிக்கிட்டக் குடுத்து, பத்ரமா எடுத்து வெக்க சொன்னாங்க. பாட்டியும் பத்ரமா எடுத்து வெச்சிட்டாங்க. அப்புறம், Tuesday, அந்த கோழி another egg lay பண்ணுச்சு. அதுவும் gold and silver color ல இருந்தது. திரும்பவும் பாட்டியும், தாத்தாவும் ரொம்ப happy ஆகிட்டாங்க. இப்டியே Wednesday, Thursday, Friday, Saturday, Sunday னு daily அந்த chick ஒரு egg lay பண்ணுச்சு. எல்லா egg உம் gold and silver color ல இருந்துச்சு. பாட்டிக்கும், தாத்தாவுக்கும் என்ன செய்றதுன்னே தெரில. பாட்டி தாத்தாகிட்ட மெதுவா, ‘இந்த chick daily ஒரு gold and silver egg lay பண்ணுதே, நம்ம இத கட் பண்ணிட்டா, எல்லா gold and silver egg-உம் நமக்கு ஒரே நாள்-ல கெடச்சிரும்ல’ அப்டின்னு சொன்னாங்க. தாத்தாவும் ‘ok’ னு சொல்லிட்டாங்க...” இங்கு ஒரு tension நிலவியது. அழ ஆரம்பித்தான். “Cut பண்ண வேண்டாம், chick பாவம், cut பண்ண வேண்டாம்” னு ஒரு அழுகை. “இல்லைடா, cut பண்ண மாட்டாங்க, அவங்க பாசமா வளர்த்தக் குஞ்சு தானே, அத எப்டி cut பண்ணுவாங்க” னு சொல்லி சமாதானப் படுத்தினேன்.

ஆக, நான் ஒரு நெறிக் கூற எத்தனிக்க, அவன் எனக்குப் பாடம் கற்பித்தான். குழந்தைகளை நாம் வளர்ப்பது இல்லை. அவர்களை, அவர்களுடைய களங்கமற்றக் குழந்தைத் தன்மையைத் தக்க வைத்து, இந்த உலகத்தையும் அறிமுகப்படுத்தி வைப்பது தான் பெற்றவர்களுடைய தலையாயக் கடமை என்பது மீண்டும் அறிவுறுத்தப் பட்டேன்.

Wednesday, August 24, 2016

Imaginations...Dreams...



As a child, I assumed the trees poke into the clouds, bursting and splashing water, that comes as rain- just like an air filled balloon bursts while poked. Asoka trees are the best, given their height. Again, for a long long time, I believed Asoka trees were planted by King Asoka (courtesy: King Asoka planted trees on either sides of the road).

What will my child imagine about- Perhaps, busy finding shapes in clouds, bringing home and taming pet birds, pampering babies, muscular arms, Dora’s adventures, solving mysteries with Team Umizoomi.

And what will this child dream about: http://www.thehindu.com/news/international/injured-aleppo-boy-is-latest-symbol-of-horrors-of-syria-war/article9002902.ece?w=alauto? 

Of guns? Of blood? Of revenge?

We only imagine and dream about what we see and experience. What peace are they talking about??!!

Tuesday, August 23, 2016

வணக்கம்

அன்பானவர்களுக்கு, நல்லா இருக்றீங்களா? இன்றிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் என் ஞாபகங்களைப் பகிர்கிறேன்.
-அன்பும் பாசமும்
நான்