Saturday, December 16, 2023

Books. Books

 The one resolution for this year that I accomplished, that I am proud of- reading 20 books in 2023. Good ride this year! Completed 25 (in total, including those not on Good reads)

Best nonfiction: Einstein: His life and universe 

Best fiction: the book thief 

Best spiritual guide: Mirdadin puththakam

Best kids book: James and the giant peach


Tuesday, November 28, 2023

கேள்விகளும் சுமையா?

இயங்காத மனம் சாத்தானின் கூடாரம் என்றார்கள்;
நாங்கள் எங்களை அர்ப்பணித்தோம்:
“எங்கள் வாழ்க்கை இந்த பூமியின் நலனுக்காகவே,’ என!
“பூமியின் நலனை வரையறுப்பது யார்?”

இயக்கங்களை இலகுவாக்க இயத்திரங்கள் பல கண்டனர்;
நாங்கள் பிரமிப்படைந்தோம்:
“நேரத்தை மிச்சமாக்கும் அற்புதமான கண்டுபிடிப்புகள்!” என!
“யாருக்காக, யாருடைய நேரம் மிச்சமாகியது?”

வேலைவாய்ப்புகள் பல உருவாக்கினார்கள்;
அவற்றில் வியந்து மூழ்கினோம்:
உண்டு உறங்க மட்டுமே வீடு என!,
“இயந்திர சமூகத்தில் ஒன்றென ஆக்கப்பட்டோமா?”

விடையில்லா இக்கேள்விகளைத் தூக்கி சுமக்கிறோம்,
இடையில்லா வேலைப்பளுவின் நடுவே:
மனங்களைத் துறந்து, ஆன்மாவை ஒளித்து,, உணர்விழந்து,
சாத்தானின் கூடாரத்திலே வாசம் செய்கிறோம்-,
இருத்தல் மட்டுமே வாழ்வென நம்பி!

Whimsical 21: God pronoun

We were listening to a worship song by Don Moen that goes - God will make a way. With love and strength each new day, He will make a way for me. Suddenly, Kutta  asks, "Why is God a He?" I asked, "why not? what then should we refer God to? He goes, "Definitely not it. God should not be a thing. How about a unisex pronoun?" I was baffled.

I said, "if not a he or she, shall we refer to God as Se? He goes-" Se does see"


Monday, September 4, 2023

அப்பன் - புத்தக விமர்சனம்

 அப்பன் -  அழகுநிலா

அப்பா-மகள் உறவு கொண்டாடப்படவேண்டிய ஒன்று. பெண்ணாகப் பிறப்பதற்கு மாதவம் புரிய வேண்டும் என்றாலும், பெண்ணாக வாழ்வதற்கு மாவலிமை வேண்டும். இத்தனை வலிமையும் கொண்டு நித்தமும் போராடியே வாழும் பெண்களின் இடர்களைப் பெரிதும் கண்டுகொள்ளாத ஆண், தன் மகள் எனும் போது மட்டும் தானே பெண்மையான, மென்மையான தாயாக மாறும் மாயம் பற்றி நிறைய பேசப்பட வேண்டும். அந்த வகையில் அப்பன் புத்தகம் ஒரு அழகு.

அட்டை முகப்பே அழகாய் இருக்கிறது – முன் அட்டையில் பாதி முகமும், பின் அட்டையில் பாதி முகமும் என திரு பஞ்சாட்சரம் அமைதியே உருவாக, மிடுக்காக, கம்பீரமாக நிமிர்ந்து இருக்கிறார். ஆனால், புத்தகம் முழுக்கக் காற்றாற்றின் சித்திரம் மேலெழும்புகிறது. மனிதன் தன் வாழ்வு முழுவதும் எந்த தயக்கமும் இல்லாமல், யாருக்குகாகவும் தன்னை சமரசம் செய்யாமல், தானாகவே வாழ்ந்திருக்கிறார் எனப் புரிந்துக் கொள்கிறேன். 

புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு வாழ்க்கை நிகழ்வை விவரிக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் ஒரு காணொளியாய் விரிகிறது. அழகுநிலா விவரிக்கும் வீடும், கிணறும், மாட்டுக் கொட்டகையும், சாலையும், பள்ளியும், ஆட்டோவும் நம் கண் முன்னே காட்சியாகிறது. திரு பஞ்சாட்சரம் தன் மகளை ‘அழகப்பா’ என மகளை அழைப்பதும், தன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அவர்களுக்கான வெளியை அளித்திருப்பதும், தன்னுடன் அவர்கள் முரண்படும்போதெல்லாம் அவர் அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்திருப்பதும் அழகுநிலாவின் எழுத்து கோடிட்டுக் காட்டுகிறது. 

அழகுநிலாவின் அப்பா தன் மாமனாரின் மரணத்தின்போது அழுததும், தன் நண்பனின் நிலைக்கண்டு நிலைக் குழைந்துப் போனதும், எதிர்த்த வீட்டுத் திருட்டுப் பிரச்சனைக்காகத் தன் தூக்கத்தைத் தொலைத்து அலைந்ததும், மகளின் காதணியைத் தேடி அலைந்ததையும் பற்றி விவரிக்கையில், அவருடைய மனதின் ஈரமும், அவருடைய பொறுப்புணர்வும், மிளிர்கிறது.

பொதுவாக நமக்கு மிக நெருக்கமானவர்களைப் பற்றி, உணர்வுப்பூர்வமாக எழுதும்போது, ஒரு நேர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்க முற்படுவோம். அதை வாசிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தும். அதை அழகுநிலா அழகாக கையாண்டுள்ளார். திராவிட சித்தாந்தத்தை ஆழமாக உள்வாங்கியிருக்கும் தன் அப்பாவைப் பற்றிச் சொல்லிவிட்டு, அவரே சாதிய அடுக்ககளைப் பின்பற்றுவதைப் பற்றியும் சொல்கிறார். தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தனக்குக் கிடைக்காதப் படிப்பை அள்ளி அள்ளி கொடுக்கும் தகப்பன், தன் அகந்தைக்கு எதிராக மகள் கேள்வி எழுப்பும்போது வெஞ்சினம் கொள்கிறார். தன் மாமனாரிடம் பாசமாக இருக்கும் மருமகன், அவர் மேல் கோபமாய் இருக்கும்போது வீட்டுக்கு வந்தவரிடம் பேசாமல் போனதையும் பதிவு செய்கிறார்- என் அப்பா தான் உலக மகா யோக்கியர் என இல்லாமல், என் அப்பா இத்தனை நிறை குறைகளோடும் மனிதனாக வாழ்ந்தும், எனக்கு அவர் தான் ஹீரோ என!

எந்த உறவிலும், புரிதல் தான் உறவின் பாலத்தைப் பலப்படுத்தும். அந்த வகையில், பல விஷயங்களில் நிலா தன் தந்தையுடன் முரண்பட்டாலும், அவரைப் பற்றிய புரிதலை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார் – உதாரணமாக, அவரின் கோபகுணத்தின் காரணிகள், அவருடைய மது அருந்தும் பழக்கத்தின் காரணிகள் என...

இவை எல்லாவற்றையும் விட, புத்தகம் முழுக்க அப்பாவை பற்றியே எழுதினாலும் அவருடைய அம்மாவால் தான் அப்பா முழுமை அடைகிறார். அவர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் நிரப்பும் விதம் மிக மிக அழகான சித்திரம்.

மிக நெகிழ்ச்சியான புத்தகம். வாழ்த்துக்கள் நிலா!

Saturday, September 2, 2023

எல்லைகள்

 “படித்தால் தான் நெடிய வாழ்வை சுயமாய் வாழ முடியும்,” என்ற அம்மா,
நான் முனைவர் பட்டம் நோக்கி ஓட எத்தனிக்கையில்,
“இதெல்லாம் எதற்கு? படித்ததுப் போதும்,” என சொல்லும்போது தான் புரிந்தது,
அவர் வரையறுத்த எல்லைக்குள் சுயமாய் வாழச் சொல்கிறார் என.
 
“எல்லையை சுருக்காதே, விரிந்து செல்,” எனத் தட்டிக் கொடுத்த கணவர்,
வேலையில் மின்னி, விடுப்பட்ட வீட்டு வேலைகள் தேங்கிப் போகையில்,
“சொன்னால் தானே தெரியும், உன் வீட்டுவேலைகளில் என்ன உதவி வேண்டும் என,” எனச் சொல்லும்போது தான் புரிந்தது,
என் எல்லையை அவர் அனுமதிக்கும் விளிம்பு வரை விரிக்கலாம் என.
 
வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டிற்குள்,
சமைக்கணும், பாத்திரம் விளக்கணும்,
குழந்தைகளின் உணவு, உடுப்பு, வீட்டுப்பாடம் கவனிக்கணும், 
அம்மா-அப்பா, மாமா-மாமியைக் கவனிக்கணும்,
பலசரக்குப் பொருட்கள், காய்கறிகள் இருப்பை உறுதி செய்யணும்,
ஒவ்வொரு நாளும் 3 வேளைக்கான உணவை திட்டமிடணும்,
மாவு அரைக்கணும், துணி மடிக்கணும்,
சமைக்கணும், பாத்திரம் விளக்கணும்!
இத்தனைக்கும் நடுவில், வேலையில் மிளிரணும்.
(வீட்டு வேலை உதவிக்கென்று ஆளே இருந்தாலும்)
இந்தப்பட்டியலின் பாரத்தையும் தலையில் சுமந்தப்படியே!

Saturday, August 26, 2023

Now

Now..
Is a timebomb to explode:
Grenades of childhood forlorns,
Pleasantry caresses forgotten;
Gunpowder of love lost,
Previleges of comfort and hug dusted off;
Dots and dots of betrayals connected,
Lines and lines of fondness in shambles;
Wired in fear, bitterness and anxiety,
Love, content and courage notwithstanding;
The now...
Encapsulates the pains of the past
All it takes is only a moment of pause
All it takes is only a moment of intense watch
For the timebomb of now to transform into fragnance of blossoms...

Wednesday, August 16, 2023

Whimsical 20: Child is the parent

 Kutta's friend came home for a stay-over. They are both very fond of each other. The friend is a budding Chess Master, the son is a novice. After I picked them from their badminton class, they played some board games and went down ant hunting. As they seemed a bit bored late in the evening, I suggested they play a game of chess. Kutta immediately shared as a matter of factly, "We tried playing the last time I visited their place. He commented that I am a weak player and he does not want to play with me". I was shocked, because the friend is thought to be very kind. And, despite Kutta sharing most stuff with me, this never occured in our conversation, and he never mentioned about this to me earlier.  

A few minutes later, when I had the chance, I sneaked into Kutta's personal space and enquired if he felt offended with the comment. He shrugged, "I know he is good at it, so I don't mind". Then, I asked specifically, "Does his commenting you as a weak player hurt?" That's when I received the most revealing response, "Why should his comment hurt? I know what I am capable of, and Chess is not my forte or interest. I know me, ma! So anybody else's comment doesn't bother".

It was one of a moment to me. Very profound, but one that a child can only express. Wish he preserves this spirit for life.

PS: Earlier, in another conversation regarding his performance in a term exam, I enquired what his neighbour scored. Pat came his reply, "Why should I know what he scores? Shouldn't I care only about my performance?"

Monday, August 7, 2023

விலக்கப்பட்ட .....

வெறுமையில் தொடங்கிய என் வேர்,

கோட்டை கட்டும் முனைப்புடன் இயங்கியது:

அன்பை தூர விலக்கி நிறுத்தி.

அன்பு விலகஅகங்காரம் ஒய்யாரமாய் நின்றது.

அன்பும் அதன் பரிவாரங்களும் விலகி நிற்க,

நான் அகங்காரத்தில் கட்டப்பட்டேன்


எங்கு தேடியும் அன்பை அறிகிலேன்,

கானல் நீராய் 

இருண்ட இருகின பாறைக் கோட்டைக்குள்

அன்பைத் தேடித்தேடி,

நெற்றியில் அடிப்பட்டு,

வீக்கங்களுடனும்தாங்கொண்ணா வலிகளுடனும் தவித்து நின்றேன்.


இருகிவெறிச்சோடிய 

இறுக்கமானஉடைக்கமுடியாத கோட்டைக்குள்

இன்பம் துளிகளாக ஊட்டப்பட்டது:

மைல்கற்கள்வெற்றிகள்பெருமை என

சரியான நேர இடைவெளியில்சிறு சிறு அளவாக

பிழைக்க ஏதுவாகதுளித்துளி இனிப்பாக


என் பெருமை என் அகங்காரத்தோடு இணைந்து,

கோட்டையை மேலும் இறுக்கி,

வெற்றி சூத்திரத்தை நிறுவனப்படுத்தியது-

எங்கும் வியாபித்து,

சுயம் மட்டுமே விரும்பி,

அன்பை நெடுந்தொலைவில் தொலைத்து!


வெற்றியை நோக்கி எடுக்கும் ஒவ்வொரு அடியிலும்,

என் தற்பெருமையும்அகங்காரமும் செழிக்க,

நான் அன்பை விட்டு நெடுந்தூரம் விலகினேன்.

பிழைத்திருக்கும் ஒவ்வொரு நாளும்,

சாவை நோக்கி செல்லும் ஒரு நாளும்

தூய்மையிலிருந்து விலகும் ஒரு நாளும் போல! 

-07 aug 2023


Translation of this

Forbidden....

 
My root started from crumbles,
With a mission of building fortress -
Love be damned.

Às love was forbade, he drunk on ego.

I was built on fortitude and ego-

Love and her coterie be damned.


As much as I sought love,

I kept losing her 

In the pervasive

Darkness inside the stone-walled fortress.

Earning several hits on my head 

Pebble-sized bumps and wrenching hurts.


Dry, desolated and parched

Within the rigid, nonmalleable fortress,

Pleasure was fed in drops of liquid:

Milestones, gratifying successes and pride, 

Drops and drops of sugar water

Timed, quantified and enough to survive.


Pride twinned with ego

Strengthened the fortress

Instituting success formulas,

Shamelessly self-gratifying

Running yonder, 

Leaving love far far behind.


With every step towards success,

I took a stride of ego and pride,

Walking far far away from love

Each living, surviving day:

A day towards death,

A day far far away from purity.


- 7 aug 2023.

Friday, August 4, 2023

ஓந்தி - புத்தக விமர்சனம்

வளங்கள், செல்வங்கள், தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பங்கள் போன்றவை அதிகதிகமாக கொழிக்கும் சிங்கப்பூரில் மிக முக்கியமான மனிதம் மிக அரிதாக காணக்கிடைக்கும். மிக கொடிய தனிமை நிதர்சனமாக பரவிக் கிடக்கும். ஆவைகளின் ஆவணமாகத் தான் நான் ஓந்தி நூலைப் பார்க்கிறேன். 8 சிறுகதைகளையும், 1 குறுநாவலையும் கொண்ட இந்த நூலின் ஒவ்வொரு கதையிலும், ஒவ்வொரு கதை மாந்தரிலும் தனிமை ஆழ வேரூன்றி அதிகாரமாய் ஏவுகிறது. தனிமையின் பிடியில் இருக்கும் மனிதர்களின் வெவ்வெறு எதிர்வினைகள், அவ்வெதிர்வினைகள் ஏற்படுத்தும் மன உளைச்சல்கள், இறுக்கங்கள், அதிர்வலைகள், அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் வினைகள் என விரிந்துக் கொண்டே போகிறது. இத்தகையான தனிமை ஆட்கொண்டிருக்கும் உலகில், நாம் பொதுவாக பேசத் தயங்கும் பாலியல் தேவைகளும், அவற்றினிமித்தம் எற்படும் அவமானமான எண்ணங்களும், மிருகங்களாக உருவகப்படுத்தப்பட்டு, சொல்லப்பட்டிருகின்றன. 

‘தொல்குடி’ என்ற முதல் கதை, மோகன்தாஸ் என்னும் ஒரு அசிரியர், தன் மனைவியின் மறைவிற்குப் பின்பாக அனுபவிக்கும் தனிமையின் துயரை வார்த்தைகளால் காட்சிபடுத்துகிறது. அவரிடம் செல்வத்துக்குக் குறைவில்லை– குழந்தைகள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள், சிங்கப்பூரில் தனி வீட்டில் வசிக்கிறார். ஆனால், தாங்கொன்னா கொடும் துயரமாய் தனிமை வதைக்கிறது. ஆசிரியராய் இருப்பதினால் உண்டாகிற பிம்பக்கட்டுபாடுகளால், மனைவியிடம் அவரின் நேசத்தைச் சொல்ல முடியாததை ‘மலையுச்சிக்குன்றுக்கு நடுவே கிடக்கும் சுனைபோல மனதில் அவருக்கு அது தேங்கிக் கிடந்தது’ என்ற ஒற்றை வரி கச்சிதமாகக் கடத்துகிறது. 

ஒவ்வொரு கதையிலும், மனிதர்களிடம் உரையாட வாய்ப்பற்று, மனதிலுள்ள உரையாடல்களே மேலெழுந்து உள்ளன - தனிமையை அறைந்துசொல்லும்படி. என்னை மிகவும் பாதித்தது விஷம் கதை. சிங்கப்பூரின் பிரமாண்டத்தை காட்சிப்படுத்திவிட்டு, முதல் முதலாக சிங்கப்பூர் வரும் ஒருவரின் ஆச்சிரியங்களும், சுற்றியிருக்கும் தேவையற்ற சலிப்பையூட்டும் தேர்வுகளும் அருமையாக உணர்த்தப்படுகின்றன. அத்தனைத் தேர்வுகளும், இவரையோ, அவரிடம் தனிமையைக் கொல்ல உறவிற்கு விண்ணப்பிக்கும் அந்த மூத்தவருக்கோ ஒரு பொருட்டாக இல்லை. சுதந்திரம் என்பது தேர்வு செய்ய முடிகிற தருணங்களால் ஆனது என்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புத்தியில் ஓங்கி அறைகிறது இந்த கதை. 

இதைப் போல ஒவ்வொரு கதையும் அதினுள் பல ஆழமான சிந்தனைகளை விதைக்கின்றன, உதாரணமாக, ஓந்தி கதையில் மனிதர்கள் ஆணோ, பெண்ணோ தங்களளவில் ஒரு மிருகத்தை வளர்த்து வருகிறார்கள் என்பது மேம்போக்காக சொல்லப்பட்டாலும், அதனை கூர்ந்து கவனித்தால், சமூகத்தின் தார்மீக நிலைப்பாட்டால், தனிமனிதன் படும் வலிகளும், அதனால் ஏற்படும் நிர்பந்தங்களும் விளங்கும். இத்தகைய புரிதல்கள், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக ஏற்புகளைக் கேள்விக்குள்ளாக்கின்றன. மனிதத் தேவைகளின், உள்ளார்ந்த எண்ணங்களை, ஒளித்துவைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ள ஆழ்மன ஆவல்களை சங்கடங்களின்றி, அவமானமின்றி, இச்கமூகம் பேசுப்பொருளாக்க வேண்டும் என்கிற நகர்வை முன்னெடுக்க இந்த புத்தகம் முயல்கிறது, என்பதை என்னளவில் புரிந்துக் கொள்கிறேன். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தனிநபர்களில் ஏற்படுத்தும் விளைவுகளை மிக கவனமாகக் கோடிட்டுக்காட்டுகிறது. வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடும், தங்களின் வளர்ச்சிக்கு ஏற்பத் தனிமனிதத் தேவைகளுக்கும் கவனம் கொடுக்க வேண்டிவயதின் அவசிவயத்தையும் வலியுறுத்துகிறது.

ஓவ்வொரு கதையிலும் சிங்கப்பூரின் வரலாற்றுக் குறிப்புகள் சிதறிக் கிடக்கின்றன. வீட்டுமனைகளின் விலையேற்றம், இயூடி பகுதியில் ஜப்பானியர்கள் எண்ணெய் சேமித்து வைத்தது, LTA விதிமுறைகள், இந்த நாட்டின் அவசரப்போக்குகள் எனப் பல பல. 

சிங்கப்பூரில் தரமான இலக்கியம் சாத்தியமா என்றொரு எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு – மிக இயந்திரத்தனமான வாழ்க்கையில், கலை ஒளியிழந்துப்போகும் என்பதால். ஆனால், அவ்வியந்திரத்தனத்தையும் ஆவணப்படுத்துவது, ஒரு உரையாடல் நிகழ வழிவகுக்கும் என்னும் வகையில், இந்த ஓந்தி மிகச் சிறந்த தொகுப்பு.

Tuesday, August 1, 2023

அவறுடன் உரையாடல்: வனம்


வனம்

சலிப்புடன், “இவ்வளவு தானா வாழ்வு?” என்றேன்.

எதை வாழ்வென்கிறாய்?” என்றொரு குரல்.

திடுக்கிட்டுத் திரும்பினேன். அவறே தான்!

தொடர்ந்து, “நீ குடும்பம், பணம், நாடுகள், பயணம், சாலைகள்,

என நிறுவனங்களின் நிறுவப்பட்ட சட்டங்களைப் புரிந்து, 

ஓடி, ஆடி, உண்டு, உறங்கி இயங்குகிறாய். 

இந்த இருத்தலின் பெயர் வாழ்வல்ல!” என்றாற். 

அப்படியெனில் வாழ்வென்றால் என்ன?” என்று குழம்பினேன்.

அவறோ, முறுவலித்தவாறே

நீ வாழ இந்த பேரண்டத்தின் நீ என்ற அடர்ந்த வனம் வேண்டும்.

நீயோஉன்வனத்தைத் தொலைத்து, ‘நிறுவனத்தில் குறுகினாய்!” என்றாற்.

பேரண்டத்தின் வனம் என்கிறீர்களே? நான் சிறிய கல் அல்லவா?” எனக் கேட்டேன்

உன்னை சிறிய கல்லாக உணர வைத்தது தான் நிறுவனங்களின் வெற்றி!

 நீ ஒரு பெரும் வெளி! உனக்குள் பயணம் செல். வாழ்வாய். சலிப்பே இராதுஎன்றாற்!

மலங்க விழித்து, மேலே பார்த்தேன்.

அங்கே இறந்த என் தாத்தா மரச் சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்தார்.


  • சவிதா, 1 ஆக 2023

பி.கு: அவற் = அவன்/அவள் (அவன் ஆண்பால். அவள் பெண்பால். இரண்டுக்கும் பொதுவாக, மெய் எழுத்துக்களில் "ள்" க்கும் "ன்" க்கும் இடையில் இருக்கும் "ற்" தேர்வு செய்தேன்! 🙂