Monday, August 7, 2023

விலக்கப்பட்ட .....

வெறுமையில் தொடங்கிய என் வேர்,

கோட்டை கட்டும் முனைப்புடன் இயங்கியது:

அன்பை தூர விலக்கி நிறுத்தி.

அன்பு விலகஅகங்காரம் ஒய்யாரமாய் நின்றது.

அன்பும் அதன் பரிவாரங்களும் விலகி நிற்க,

நான் அகங்காரத்தில் கட்டப்பட்டேன்


எங்கு தேடியும் அன்பை அறிகிலேன்,

கானல் நீராய் 

இருண்ட இருகின பாறைக் கோட்டைக்குள்

அன்பைத் தேடித்தேடி,

நெற்றியில் அடிப்பட்டு,

வீக்கங்களுடனும்தாங்கொண்ணா வலிகளுடனும் தவித்து நின்றேன்.


இருகிவெறிச்சோடிய 

இறுக்கமானஉடைக்கமுடியாத கோட்டைக்குள்

இன்பம் துளிகளாக ஊட்டப்பட்டது:

மைல்கற்கள்வெற்றிகள்பெருமை என

சரியான நேர இடைவெளியில்சிறு சிறு அளவாக

பிழைக்க ஏதுவாகதுளித்துளி இனிப்பாக


என் பெருமை என் அகங்காரத்தோடு இணைந்து,

கோட்டையை மேலும் இறுக்கி,

வெற்றி சூத்திரத்தை நிறுவனப்படுத்தியது-

எங்கும் வியாபித்து,

சுயம் மட்டுமே விரும்பி,

அன்பை நெடுந்தொலைவில் தொலைத்து!


வெற்றியை நோக்கி எடுக்கும் ஒவ்வொரு அடியிலும்,

என் தற்பெருமையும்அகங்காரமும் செழிக்க,

நான் அன்பை விட்டு நெடுந்தூரம் விலகினேன்.

பிழைத்திருக்கும் ஒவ்வொரு நாளும்,

சாவை நோக்கி செல்லும் ஒரு நாளும்

தூய்மையிலிருந்து விலகும் ஒரு நாளும் போல! 

-07 aug 2023


Translation of this

No comments:

Post a Comment