Monday, December 30, 2024

Fondness

Had been very fond of you ever since I first met you in 1996. Your lack of inhibitions, classy demeanor, sincerity and the enthusiasm exuberant of a teenager was very enticing. We have always held each other with respect and fondness. We have always cared for each other. It had always been that edge of the wall fondness- gentle holding, inspiring each other without getting too involved, meaning well for each other etc. I was worried that time would have stolen this from us. I was worried that monotony would have corrupted. I was worried that corporate affinity would have corrupted this fondness. Boy! So warming to note that my worries are unfounded and it was a lovely evening. Thank you for being you!

I'm glad that I did not "fall" for you. Had that been, we might have turned sour. Thank God that didn't happen 

Tuesday, December 24, 2024

சீனிச்சேவு- கற்றல்கள்

 . வின் வழக்கம் போல எளிய மனிதர்களின் அறமும், அன்பும் நிறைந்த கதை. . விற்கு இது முருகன் காலம் போலும். வரிசையாக முருகனைக் கடைகிறார். 


இந்த கதையின் நாயகன் என்னவோ முருகன் தான், ஆனால், அம்மா தான் வீரியம். ‘ஞாயத்துக்கு முன்னாடி பெத்த பிள்ளையாவது மசிராவதுஎன்ற போக்கும், தன்னை அடக்க முற்பட்ட மகனை, “எம்புருஷன் என்னோட படுத்துக் கிடந்த பவிசுக்காக என்னன்னாலும் பேசுவான். நானும் பொறுமையா கேட்டுக்குவேன். உசுர் வாழ என்ட்ட பாலைக் குடிச்சிட்டு படுத்துக் கிடந்த பயல் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டீயா? மரியாதையா பேசு இல்லாட்டி நாக்கை இழுத்து வச்சு அறுத்திருவேன். உன் காசும் வேண்டாம் மயிரும் வேண்டாம். நான் கல்லுடைச்சாவது எம்புள்ளைகளை காப்பாத்திக்குவேன்.”  அப்பாவை ஆண்டதும், அப்பா தன்னை ஆண்டுகொண்டதைப் பொறுத்துக் கொண்டதற்காக அவள் கொண்ட நியாயமும், கொண்ட உறுதியும் என பெண்ணியமும், பெண் சுதந்திரமும் போகிற போக்கில் வீரியமான அம்மாவின் மூலம் மின்னுகிறது


 அம்மாவென்கிற அங்குசம் மனதளவில் இல்லாமல் போனபிறகு அவனுக்குள் தினவெடுக்கத் துவங்கி விட்டது என்ற ஒற்றை வரி போதும். அம்மா ஆக்ரோஷமானவள் அல்ல, ஆனால் ஆண்டாள் - கணவனை, மகள்களை, பெற்ற மகனை, ஏற்றுக் கொண்ட மகனை! என்னுடைய அங்குசம் என்ன என்பதை ஒரு நொடி நினைத்துப் பார்க்கவும் செய்தேன். 


அவளும் கடவுளே! அவளைக் கடக்க இயலாமல் தான் முருகனின் பழக்க வழக்கங்கள் மாறுகின்றன-உள்ளே இல்லாத அமைதியைத் தாங்கவியலாமல்! அமைதி எனும் வெளிச்சத்தை நோக்கி செல்லுதலை, “வெளிச்சத்தை நோக்கி நீதாம்லே நெருங்கி போகணும். ஒருநாள்ள சாகிற விட்டில் பூச்சிக்குக்கூட இந்த உண்மை தெரிஞ்சிருக்கு. மனுஷனுக்குப் புரியலையா? விலகி விலகி போயிட்டு இருட்டா இருக்குன்னு புலம்புனீன்னா எப்படி?” என்று கடத்தி விடுகிறார்.


“படிப்புங்கறதே இந்த வாழ்க்கையை வாழக் கத்துக்கிறதுதான். வாழ்றதுக்குத்தான் எல்லாமும். பொருளீட்டறதுக்கு முன்னாடி எந்த ஞாய தர்மத்துக்கும் இடமே இல்லைதான். பொருளில்லாதவங்களுக்கு இந்த பூமி இல்லைங்கறதை ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே ஒருத்தர் சொல்லிவச்சிட்டு போயிட்டார். அதுக்காக பொருள் மட்டுமே வாழ்க்கையும் இல்லை பார்த்துக்கோ. அது உனக்கு ஒருநாள் புரியவும் செய்யும். என்னைக்காச்சும் தோணறப்ப வந்து பாரு”


அதெப்படி ரேஷனரிசிச் சோற்றைப் போல வெந்து சாகிற தன்னிடம் அனுமதி கேட்காமல் அம்மா அதைச் செய்தாள் என்று அப்போதுமே நினைத்தான்.

 “எம்புருஷன் என்னோட படுத்துக் கிடந்த பவிசுக்காக என்னன்னாலும் பேசுவான். நானும் பொறுமையா கேட்டுக்குவேன். உசுர் வாழ என்ட்ட பாலைக் குடிச்சிட்டு படுத்துக் கிடந்த பயல் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டீயா? மரியாதையா பேசு இல்லாட்டி நாக்கை இழுத்து வச்சு அறுத்திருவேன். உன் காசும் வேண்டாம் மயிரும் வேண்டாம். நான் கல்லுடைச்சாவது எம்புள்ளைகளை காப்பாத்திக்குவேன்.” என்றாள் தீர்மானமாய்.

ஞாயத்துக்கு முன்னாடி பெத்த பிள்ளையாவது மசிராவது

நாய் நரி பறவைன்னு எல்லா உசுருமே தான் சோத்துக்கு தானேதானே உழைக்குது? நான் மட்டும் என்ன செறப்பு? இனியாச்சும் எவர் கையையும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்து பார்க்கிறேன்.

 அம்மா இல்லாத நேரங்களில் மட்டும் போய் சாமி படத்திற்கு அடியில் பணத்தை வைத்துவிட்டு வருவான். அந்தப் பணம் எடுக்கப்படாமலேயே குவிந்து சேர்ந்து கொண்டிருப்பதையும் பார்த்தான். ஆனால் தன் கடமையில் இருந்து வழுவிவிடாத செயலைத் தவறாமல் மேற்கொண்டான். அப்போது அப்பாவைத் தன்னுள் இருத்தி நினைத்தும் கொண்டான்.

அம்மாவென்கிற அங்குசம் மனதளவில் இல்லாமல் போனபிறகு அவனுக்குள் தினவெடுக்கத் துவங்கி விட்டது.

Sunday, December 15, 2024

The closure: My Thoughts sway, as you lay

You lay exactly like how I dreamt my corpse should be - serene, smiling, delivering your assumed responsibilities and having a good run.  There was encompassing peace within me when I saw you - my resolution to remain unmoved for you suddenly embraced peace. One prominent thought that emerged was: may this soul find peace.  The soul that was battered beyond measure by the several malice that played around you. The soul that was denied the truth and peace by the clouds of your resolute choice to avoid confrontations. 

Did you fear confrontations? 

Did you detest confrontations?

I wonder. Or was it a resolution to take the low energy path? Or, was it a means to revenge truth for all the hardships it showered on you? I wonder. Because, behind the seemingly impeccable path of life you chose, you always chose the people who seemingly yessed with you- regardless of whether they abided or not. Probably, you knew within you that they wouldn't, yet you sided with them because you preferred a superficial peace that surfaced a mysterious web of malice. 

For years on end, I desperately attempted to reveal this to you. I would rehearse my lines, plan my arguments, all year round before visiting you. Mysteriously, the person you were struck through these rehearsed lines and planned arguments, everytime I met you. Yet, that did not deter me. Whenever I communicated, you would laugh. Whenever I questioned, you would laugh. Whenever I made a complaint, you would remain silent. In the early days, I perceived insult. When I chose to silence my inner volcano that was brimming to explode, it exploded within me causing collateral damage to my persona. And I carried the broken insides like a plaque. The lack of peace within forced me to seek antidotes outside, but ended up compounding more hurts and hurls. You'll never comprehend the volumes of pain I accumulated over these years. 

When I observed the patterns without judgement, I realized I was not alone. Every one of the household, sans the beneficiaries, had similar experiences- some, even at an unprecedented scale. Connecting the various dots, I now believe that you knew all my complaints and answers to all my questions, yet you chose to ignore. 

Probably, your life got stuck when you lost the love of your life. You desperate attempts to save her and preserve her failed miserably and you lived in denial- I hear recounts that you visited her every weekend even when she was terminally ill, and didn't move a bit from her bedside throughout these visits. That kind of commitment awes me. Yet, when you lost her, you forced yourself to gather yourself up and feign strength. Probably, you began wearing the garment of  feigned peace and veiled your insults- worse you assumed that was the skin of every human- buttered up with words and dressed in smiles. That's the only consolation I can take.

If you hadn't realized this: for the longest time, I struggled to live up to your expectations. Only that I did not know what you expected. I tried to fill your claimed vacuum of missing a daughter, because you proclaimed to a timid, striving-for-acceptance me on 15.8.2005: "as I don't have a daughter, you will be my daughter, not a daughter in law". I believed those words truly, I loved you truly, and there began my arduous journey.

 I'm sure your soul now rests in real peace. I no longer care about a smiling corpse of me, I hope to deliver my responsibilities and have a peaceful happy life. I pray and hope to have a content soul while I'm still alive. 

Friday, November 22, 2024

The Passing Away

Passing Away
From this Earthly abode
To an unknown place.
In a moment, stripping off...
All the human years of physical struggles,
Intertwined with the myriad mental wriggles,

Shedding decades
Of accumulated heavy weight:
Weight of the mortal body,
Weight of expectations,
Weight of acquired knowledge,
Weight of perceived notions,
Weight of beliefs and dogmas,
Weight of passionate aspirations,
Weight of filial responsibilities,
Weight of societal judgments;

Without having to:
Draw boundaries,
Take sides,
Making judgements,
Or Listen to words-
Comprehensible only by languages.
All that remains is the soul,
Swaying to find it's heavenly abode.

Wednesday, October 23, 2024

The wonder of a human cell

                               

The most detailed model of a human cell to date, obtained using x-ray, NMR and cryoelectronic microscopy datasets. 

‘Cellular landscape cross-section through a eukaryotic cell.’ 

- by Evan Ingersoll and Gael McGill.

Given unlimited resources, we still have no idea how to make a factory (or any system) that self-replicates without any detected conscious assistance, no matter how large it’s allowed to be, and no matter how much compute we put into it.

But cells are self-replicating molecular factories, and they’re smaller than a pixel on your phone.

And, when you really zoom in on them, it’s like the trippiest arrangement of molecules you can possibly imagine. Looks like a microscopic alien society.

Biologists are heroic for even trying to understand this.

-- Richard Behiel

Monday, October 21, 2024

5.12 புத்தக விமர்சனம்

வணக்கம். நான் இன்று நான் திரு எம் கே குமார் எழுதிய 5.12 புத்தகத்தைப் பற்றி பேசப் போகிறேன். முதலில் ஏன் இந்த புத்தகம்?

புத்தகங்களுள் மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் பற்றி வாசிக்க எனக்கு மிகவும் பிடித்தம். மனிதனாக, நமக்கு உண்டாகும் அனுபவங்கள் எதுவும் நமக்கு மட்டும் உண்டாகிற அனுபவங்களோ, இதற்கு முன் யாருக்குமே உண்டாகாத அனுபவங்களோ அல்ல. நம்முடைய வாழ்வு வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு அனுபவங்களின் தொகுப்பு என உறுதியாக நம்புகிறேன். அந்த வகையில், நான் ஜெர்மனியை விட்டு தப்பியோடி பெரும் வெற்றிக் கண்ட ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாறும் வாசித்திருக்கிறேன், அதே ஹிட்லரின் அடக்குமுறையில் ஜெர்மனியைவிட்டு தப்பியோடி சூழ்ச்சியில் உயிரிழந்த இலக்கியவாதி தோழர் டொரா பாபியனின் வாழ்வியலும் வாசித்திருக்கிறேன். மனிதர்கள் தங்கள் அசாதாரணச் சூழ்லில் எப்படி இயங்குகிறார்கள் என்பதற்கும், நம் எல்லைகளைப் புரிந்து கொள்வதற்கும் இத்தகைய புத்தகங்கள் பெரும்பாடம்.


ஆனால் சாதாரண சூழ்நிலைகளில் மனிதர்கள் இயங்கும் விதம் அந்த வாழ்விடத்தின் கலாச்சாரத்தை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில், நம் வாழும் சூழலும் அதன் கலாச்சாரத்தின் பிம்பமும் தொகுக்கப்பட வேண்டியவை. திரு எம்  கே குமாரின் புத்தகங்களை நான் அவ்வாறு தான் பார்க்கிறேன்.  சிங்கப்பூரில் இலக்கியத்துக்கான சிறந்த கூறுகள் இருக்கிறது எனப் பல கற்பிதங்களை அவரின் எழுத்து வழியே அறிந்துக் கொள்கிறேன். அவருடைய 5.12 யானாலும், ஓந்தி ஆனாலும், அவை என்னளவில் நிறைய கேள்விகளை விதைத்தவை.


இப்போது 5.12 க்குள் செல்வோம். மொத்தம் 13 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. திரு எம் கே குமார் அவர்கள் பல தளங்களில் வெளியிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. அத்தனையும் சிங்கப்பூர் சூழலிலேயே அமைந்திருப்பது தனிச் சிறப்பு. 13 கதைகளையும் ஒரே நூலில் இணைக்க வேண்டுமெனில், இரண்டு விடயங்களால் இணைந்திருக்கின்றன. முதல் இணைப்பு, நான் முன்னமே சொன்னதுபோல சிங்கப்பூர் சூழல், இரண்டாவது இலைமறை காய்மறையாகப் பகடி- அதனைக் குசும்பு என்றும் வைத்துக் கொள்ளலாம்.


முதல் கதை: அப்யாசிகள். அப்யாசிகள் என்றால் தாங்கள் கடைப்பிடிப்பவற்றைப் பயிற்றுவிப்பவர்கள். புத்தகத்தை முதன்முதலில் வாசித்து முடித்த பின்பு இந்த கதை மட்டுமே எனக்குள் மேலெழுந்து நின்றது. இந்த கதையில் நம் மீது திணிக்கப்பட்ட சில அடிப்படை நம்பிக்கைகளின் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மதம், மதத்தின் மூலம் கடவுள் நம்பிக்கை, அந்த நம்பிக்கையின் மூலம் நமக்குள் எழும் ஆன்மீகம் பற்றிய எழுத்தாளரின் தெளிவு என்னை பெரிதும் அசைத்துவிட்டது. இதனை உணர்வதே பெரும் வரம், அதனை இத்தனை நேர்த்தியாக எழுதுவது என்பது பிரமிப்பாக இருந்தது. ஒரே ஒரு பத்தியை வாசிக்கிறேன். 


கோயிலுக்குச் சென்று கடவுள் உருவத்தைப்பார்த்துவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறோம், அப்படித்தானே! அப்புறம் என்ன செய்கிறோம்? கண்களின் வழியாக, சிந்தனைகளின் வழியாக எண்ணங்களை ஒருமுகப்படுத்தி நமக்கு வேண்டியவற்றைக் கேட்கிறோம், இல்லையா? கிடைத்தவற்றுக்கு நன்றி சொல்கிறோம், இல்லையா? ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நம் மனத்தில் நிற்பது நமது எண்ணங்களே அன்றிக் கடவுளுருவா என்ன? 


என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார். இது பகடி அல்ல. அவர் கேட்கும் கேள்விகளின் மூலம், அந்த கேள்விகளுக்கான முனைப்பை நமக்குள் கடத்துகிறார். கேள்விகளுக்கான விடைகளை நமக்குள் தேடினாலே கண்டுகொள்ளலாம்!


அலுமினியப் பறவை என்னும் கதை. இது திரு பா உதயகண்ணன் தொகுத்த உலகத்தமிழ் சிறுகதைகள் 25யில் இடம்பெற்ற சிறுகதை. சிங்கப்பூர் ஆசியாவின் வாய்ப்புகளின் சொர்க்கம் என ஊரில் அறியப்பட்டாலும், வாய்ப்புகளை நோக்கி செல்லும் பாதை அத்தனை எளிதல்ல என்பது காட்சியாக விரிகிறது, அலுமினியப்பறவை கதையில். சிங்கப்பூர் வரவேண்டும் என முடிவு செய்தவுடனேயே அல்லல் ஆரம்பம் ஆகிறது. அந்த கதையில் வரும், “இத்தனை பெரிய உருவம் பறக்கிறது என்று சொன்னால் நம்ப முடியவில்லைஎன்ற ஒற்றை வரியில், அலுமினியப் பறவை என விளிக்கப்பட்டது விமானமா, அல்லது அத்தனை சுமையையும் சுமந்துகொண்டு சுந்தர் இயங்குவதைக் குறிக்கிறதா என ஐயம் ஏற்படுகிறது. 


நல்லிணக்கம் என்னும் ஒரு கதை, இந்த கதை, “இன நல்லிணக்க மேம்பாடு மற்றும் ஒற்றுமையுணர்வை வலியுறுத்தும் விதமாய் சிங்கப்பூரின் அரசாங்க நிறுவனமொன்றில் உயர்ந்த பதவியிலிருக்கும் ராசய்யா டேவிட் வீட்டிற்கு, அன்று காலை பத்து மணியளவில் செம்பவாங்க் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. குங் சங் கூவாங் அவர்கள் வருவதாயிருந்தது.” என ஆரம்பித்து, நகைச்சுவையாய் விரிகிறது, கதை! பல பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு பாத்திரமும் சிங்கப்பூரின் ஒரு அங்கத்தின் பிரதிநிதி. 


மோர்கன் எனும் ஆசான் எனும் கதையில் மொர்கனாகத் தன்னை நம்பும் தமிழ் சமூகத்தைச் சார்ந்த மோகன் எனும் பாதுகாவலருக்கு, ஊரிலிருந்து வந்து முட்டி மோதி வளர்ச்சிகாணும் செந்திலின் மேல் வரும் எரிச்சலும், அதனால் தன்னுடைய இன அடையாளத்தை மாற்ற முயற்சிசெய்வதும், அந்த அடையாளத்தின் நிமித்தம் செந்திலின் மீது அவர் செலுத்த விரும்பும் தன்னுடைய ஆதிக்கத்தையும், அவருடைய குழப்பதினூடே அவர் செய்யும் சிறு தவறும், அந்த தவறின்மூலம் அவருடைய அடையாளமே கேள்விக்குறியாக்கப்படுவதும் என விரிகிறது கதை! இன, குழு அடையாளம் என்பதே பிம்பங்கள் தான் அல்லவா? பிம்பங்கள் என்றும் நிலையற்றவை, அல்லவா?


இப்படி சிங்கப்பூர் சூழலில் அமைந்திருக்கின்ற கதைகளில், ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு பணி செய்பவர் முதன்மையாக முன்னிறுத்தப்படுகிறார். வணிகம் சார்ந்த இந்த நகரத்தில், ஒவ்வொரு பணியிலும் இருக்கும் சவால்களையும் இக்கதைகள் மூலம் சிறிதேனும் அறிந்து கொள்ளலாம். ஆனால், எங்கேயும் சலிப்புத் தட்டாமல், நகைச்சுவையோடும், சிறு பகடியோடும் அளித்திருக்கிறார். குறிப்பாக, விவரிப்புகள். உதாரணமாக, எல்லா கதையிலும் வரும் மனிதர்களைப் பற்றிய விவரிப்புகளும், அலுமினியப்பறவை கதையில் விமானத்தைப் பற்றிய விவரிப்புகளும், மோர்கன் கதையில் வரும் கணினி செயல்பாடுகள் பற்றிய விவரிப்புகளும் அருமை. முக்கியமாக, சுழற்சி கதையில் வரும் சிவாண்ணனின் விவரிப்பில் அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உண்டாவதைத் தடுக்க முடியவில்லை.


சுருக்கமாக, 5.12 யில் இருக்கும் கதைகளும், கதை மாந்தர்களும் நம்மை கொஞ்சம் அசைக்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொறு கதையுமே நமக்குள் கேள்விகளை எழுப்பும். கேள்விகளுக்கான விடைகளைத் தேட முற்படுவோம். கண்டிப்பாக வாசித்து மகிழுங்கள்.