Thursday, April 11, 2019

Short Story 2



Can you tell a story with this picture?
ஒரு fish jump பண்ணி jump பண்ணி boat குள்ள விழுந்திருச்சி. ஒரு boy அந்த fish அ water குள்ள விட்டாங்க. அது move ஆகல. உடனே tickle பண்ணினாங்க. Alive ஆகிருச்சு.


Wednesday, April 10, 2019

என் குமிழி

நான் ஒரு குமிழிக்குள் உட்கார்ந்து
உலகம் அழகாய் இருப்பதைப் பார்த்தேன்;
கைத்தொடும் தூரத்தில் வானவில்லும்,
எங்கும் நிறைந்திருக்கும் செழிப்புமாய்
இதுவே வாழ்வென்றுத் திளைத்துக்கொண்டிருந்தேன்;
உழைப்பைப் பற்றின எந்த முனைப்பும் இல்லாமல்!
ஒருநாள் பெரும் மூச்சுத்திணறல் ஏற்பட,
என் அண்டத்தைக் கிழித்து வந்தேன்!
அன்று, எனக்கும் சேர்த்து உழை(த்த)ப்பவர்களின்
ரேகை அழிந்தக் கைகளை,
வெடிப்பேறிய கால்களை,
அறுந்துக்கிழிந்தக் குரல்களை,
கவனிப்பற்றக் குடும்பங்களைக்
கண்டு மனம் வெம்பினேன்,
இத்தனை செல்வங்களை விட்டுவிட்டா
குமிழிக்குள் அடைபட்டுக் கிடந்தோம் என!

Wednesday, April 3, 2019

Block 806

Block 806, #02-4265: சிங்கையின் முதல் வீடு. இன்று செல்ல நேரிட்டது.
Escalator ஏற பழகிய நாட்கள்;
HDB வீடுகளை அடையாளம் கண்டுகொள்ள பயின்ற நாட்கள்; முதன்முதலில் முகவரியில் #போடுவதைப்பார்த்து அந்நியப்பட்டு விந்தயாய் விழித்த நாட்கள்;
When spoilt for choices, தத்துபித்தென வாங்கிக்குவித்துப்பின் தேர்ந்தெடுக்கக்கற்ற நாட்கள்;
கையூன்றி வாழப்பழகுகையில், சரியா, தவறா எனத்தெரியாமல் திணறிய நாட்கள்;
NTU வரைத்தனியே போய் இரவு 11மணிக்குத் திரும்பிய நாட்கள்;
ஒவ்வாத சூழலில் அகப்பட்டதாய்த்தத்தளித்த நாட்கள்;
அந்த சூழலுக்குள் என்னைப்பொருத்த முயன்ற நாட்கள்; முறுக்கு, தட்டை, gulab jamoon, மோர்க்குழம்பு சமைக்கப்பயின்ற நாட்கள்;
NLB membership வாங்க நூலகம் தேடி அலைந்த நாட்கள்;
பற்பல வருடங்களுக்குப்பின் பொழுதுப்போகாமல் திரைப்படம் பார்க்க ஆரம்பித்த நாட்கள்;
internet க்குப் பழக்கப்பட்ட நாட்கள
 என சரம்சரமாய்ப் பதறவைக்கின்றன, ஞாபகங்கள்.