நான் ஒரு குமிழிக்குள் உட்கார்ந்து
உலகம் அழகாய் இருப்பதைப் பார்த்தேன்;
கைத்தொடும் தூரத்தில் வானவில்லும்,
எங்கும் நிறைந்திருக்கும் செழிப்புமாய்
இதுவே வாழ்வென்றுத் திளைத்துக்கொண்டிருந்தேன்;
உழைப்பைப் பற்றின எந்த முனைப்பும் இல்லாமல்!
ஒருநாள் பெரும் மூச்சுத்திணறல் ஏற்பட,
என் அண்டத்தைக் கிழித்து வந்தேன்!
அன்று, எனக்கும் சேர்த்து உழை(த்த)ப்பவர்களின்
ரேகை அழிந்தக் கைகளை,
வெடிப்பேறிய கால்களை,
அறுந்துக்கிழிந்தக் குரல்களை,
கவனிப்பற்றக் குடும்பங்களைக்
கண்டு மனம் வெம்பினேன்,
இத்தனை செல்வங்களை விட்டுவிட்டா
குமிழிக்குள் அடைபட்டுக் கிடந்தோம் என!
உலகம் அழகாய் இருப்பதைப் பார்த்தேன்;
கைத்தொடும் தூரத்தில் வானவில்லும்,
எங்கும் நிறைந்திருக்கும் செழிப்புமாய்
இதுவே வாழ்வென்றுத் திளைத்துக்கொண்டிருந்தேன்;
உழைப்பைப் பற்றின எந்த முனைப்பும் இல்லாமல்!
ஒருநாள் பெரும் மூச்சுத்திணறல் ஏற்பட,
என் அண்டத்தைக் கிழித்து வந்தேன்!
அன்று, எனக்கும் சேர்த்து உழை(த்த)ப்பவர்களின்
ரேகை அழிந்தக் கைகளை,
வெடிப்பேறிய கால்களை,
அறுந்துக்கிழிந்தக் குரல்களை,
கவனிப்பற்றக் குடும்பங்களைக்
கண்டு மனம் வெம்பினேன்,
இத்தனை செல்வங்களை விட்டுவிட்டா
குமிழிக்குள் அடைபட்டுக் கிடந்தோம் என!
No comments:
Post a Comment