Thursday, August 20, 2020

இட ஒதுக்கீடும் சமூகநீதியும்

கிராமத்தில் இருந்த தாத்தாவின் வீட்டில் திண்ணைகள் பலவுண்டு. பகலில் சதா அந்த திண்ணைகளை ஆக்கிரமத்துக் கொண்டிருப்போம். திண்ணைகளுக்குக் கீழே முன்வாசலுக்கும் புறவாசலுக்கும் நடுவில் நீண்ட பாதை. இருபுறமும் தலா இரண்டு வீடுகள். ஒரு வீட்டில் மட்டும் எங்கள் குடும்பம் வசித்தோம். இரவானால், அந்த பாதை நெடுக பாய் விரித்து, வெட்டவெளியை வெறித்தபடி, படுத்து உறங்குவோம். அதிகாலையில் தண்ணீர் உலவ நல்லசிங்கம் அண்ணன் வருவார். சண்முகநாதன் அண்ணனும் வருவார். எங்களைத் தாண்டி, இரு கைகளில் குடங்களுடன் அவர்கள் எவ்வாறு தண்ணீர் உலவினார்கள் என்பது இன்றளவும் வியப்பே! 
 
எங்களுக்கு முடித்திருத்தம் செய்ய நாவிதர் ஒருவர் வருவார். வயது வித்தியாசமின்றி, அவரை அனைவரும் அம்பட்டையன் என்றே அழைப்போம். அவருக்குக் காது சிறிது மந்தம். அதிகம் பேச மாட்டார். வேலையை முடித்தப்பின்னர் சலனமில்லாமல் சென்று விடுவார். எங்கள் வீட்டிலிருந்து சிறு தொலைவில் ஒரு கற்சுவருக்குப் பின் அவர், அவர் மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார் என்பது மட்டும் தெரியும். 

தினமும் இரவு 7 மணிக்கு ஒரு பாத்திரத்துடன் தாவணி அணிந்த பெண் ஒருவர் வந்து படிகளின் கீழ் நின்றுக்கொண்டு, ‘பழையது வாங்க வந்தேன் தாயீ’ என்பார். சிறிது நேரத்தில் சித்தி, நீர்த்த சோற்றையோ, மதியம் மீந்த சோற்றையோ கொட்டிவிட்டு செல்வார்கள். அதே பாத்திரத்துடன் இன்னும் பல வீடுகளுக்குச் சென்று பழையது வாங்குவார் அந்த பெண். நாங்கள் சிறு வயதாயிருக்கும்போது அவரைப் பார்த்தவுடன், ‘பழையது வாங்க வந்தேன் தாயீ’ என்று கூட்டமாகக் கத்துவோம். அது அவர்களுக்கு அவமானமாய் இருக்கும் என்பதையே உணர பல வருடங்கள் ஆனது. அதை உணரும்போது, அவர்கள் அம்பட்டயனின் மகளென்றும், அவர்கள் பெயர்  மாரியம்மா என்பதும் அறிந்துக்கொண்டேன்.

தாத்தா மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தபோது, இதே அம்பட்டயன் வந்து தான் தாத்தாவை சுத்தப்படுத்துவார். தாத்தாவுக்கு நடக்கமுடியாமல் போனபோது, அவரது 6 மகன்களில் ஒருவர் கூட அவரைத் தாங்கிக்கொண்டு கழிவறைக்கோ, குளியலறைக்கோ, கூட்டிச் செல்லவில்லை. அத்தனையும், அம்பட்டயனே செய்தார். அப்பொது நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அம்பட்டயன், அப்போது தான் எனக்கு அம்பட்டயன் தாத்தாவாக பரிணமித்து இருந்தார். அதன் பின்பு, தாத்தாவும் இறந்து விட்டார். நானும் அதிகம் விடுதிகளில் தங்கிப் படித்து வந்ததால், கிராமம் செல்வதுக் குறைந்தது.

போன வருடம் மாரியம்மா அக்காவைப் பார்க்க நேர்ந்தது. அம்பட்டயன் தாத்தா இறந்து விட்டிருந்ததை அறிந்துக் கொண்டேன். மாரியம்மா அக்காவின் மகள் BSc (Nursing) படித்துக்கொண்டிருப்பதாக சொன்னார்கள். மகன் polytechnic  முடித்துவிட்டு, தங்கையின் படிப்பிற்குக் கட்டணம் செலுத்தும் அளவிற்கு சம்பாதிப்பதாக சொன்னார்கள். சமத்துவபுரத்தில் ஒரு வீடும் கிட்டியது அவர்களுக்கு. இதைத்தான் நான் வளர்ச்சியாகப் பார்க்கிறேன். இதைத்தான் சமூகநீதியின்  வெற்றியாகக் காண்கிறேன். இதைத்தான் இலவசங்களின் வெற்றியாகக் காண்கிறேன்.

எங்கள் வீட்டில் என் அப்பா தலைமுறை தான் படித்த முதல் தலைமுறை. எங்கள் தலைமுறையினர் இருக்கும் opportunities ஐ புரிந்துக்கொள்ளும் வேளையில், எங்கள் தாத்தா தலைமுறையில் படித்த குடும்பங்கள் எங்கோ சென்றுவிட்டனர். அம்பட்டயனின் வழித்தோன்றல்களில் முதல் தலைமுறை அவமதிப்பின்றி, பல வீட்டின் பழையது கலந்து உண்ணாமல், பிடித்தோ, பிடிக்காமலோ, ஒரு degree வாங்குவதற்குள், எங்கள் வீட்டின் 3ஆவது தலைமுறை தனக்குப்பிடித்த degree வாங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. அவர்கள் எட்டாக்கனியாக கிடைத்ததைப் படிக்க நினைக்கையில், இங்கு நினைத்ததைப் படிக்க ஆரம்பித்தோம். இந்த சமூக இடைவெளியைத் தான் நொறுக்க வேண்டும். ஆகையால், நாடு முழு வளர்ச்சிப் பெற வேண்டுமாயின், இந்த சமூக நீதி நிலையுறுத்தும் இட ஒதுக்கீடு மிக மிக அவசியமாகத் தொடர வேண்டும்.

Tuesday, August 11, 2020

Ask. People WILL respond. You are not targetted

Felt that familiar distate- that bitterness, that irritable mood, that stiffening, that sombre, that impulsiveness. Anxiety. Fear. Rejection. Insecurity. I'm worried I might get back to this place, if and when I go back to office.

The response was tremendous. If you feel bad about something, ask. And you will receive your response
Had a good hour long prayer session with b. 

Friday, August 7, 2020

Rain Diaries Poetry MIC

I leaf through your tender pages,

Into a time capsule of the past:

You, who transformed from reams of paper,

To absorbing my precious stories…

The curls, sways, and lines of my tender fingers beholding;

Stories resplendent with…

Pride and Smudges,

Power and Fall,

Love and Desire,

Order and anarchy,

As you witnessed me blooming

From the tiny timidity

To the I-live-my-life blossom;

 

You have been my mirror:

The mirror that froze my charm,

The mirror that gurgled my silliness,

The mirror that shared perspectives,

The mirror that cleared a many clouds;

The mirror that enlivens my listless, mindless monotony.

 

Your strength beshines:

As you hold my repressed millions and blurted thousands:

The repressed million

-Thoughtful, measured words that I wish were aired,

My vocal folds and ovalling lips snared

The blurted thousand

-Thoughtless, oh-so-uncalculated blemishes I spurted,

I wish I had instead snorted.

 

Dear Diary, You are the unconditional love I seek

You are the non-judgmental listening I trust

You are the depth I traverse

You are the sky I fly high

You are my rain that fall and freshen

You are my rain that flow and flourish

You are my rain that renew and nourish!

You are the me that I adore and cherish;

You are the me that I adore and cherish!

Monday, August 3, 2020

Conversations with Hem: அன்பான கடவுள்


எனக்கு என் கடவுளை மிகவும் பிடிக்கும்
என் கைப்பிடித்து, என்னைப் போஷித்து,
என்னைக் காப்பாற்றி, எனக்கு இளைப்பாறுதல் அளித்து,
என்னை என்னையாகவே நேசிக்கிற என் கடவுள்.
உண்மையாகவே,
பார் உள்ள அளவும்,
நான் உள்ள அளவும்
என்னை நேசிக்கிற கடவுள்!
அவரை நெருங்க எத்தனித்தேன்.
அன்பான கடவுள் அல்லவா? நெருங்கி செல்ல அனுமதித்தார்.
உற்சாகமாய் இருந்தார்.
பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தார்.
சிரித்த முகமாய் இருந்தார்.
எப்பொழுதும் சாந்தமாய் இருந்தார்.
எப்பொழுதும் பிரகாசமாய் இருந்தார்.

‘கடவுளே, நானும் உங்களைப் போல் ஆகவேண்டும்’ என்றேன்.
‘ஆன்பாக இரு மகளே, அது போதும்’, என்றார்.
‘நான் அன்பு செலுத்துகிறேனே’ என்றேன்.
என்னை கைப்பிடித்து அழைத்து, அருகில் அமர்த்தி,
‘அன்பு செலுத்துவதற்கும், அன்பாக இருப்பதற்கும் நீண்ட இடைவெளி உண்டு’, என்றார்.
தொடர்ந்து,
‘கடவுளின் அன்பு உலகை சுமக்க வேண்டும்’, என்றார்.
‘ஆனால், நீங்கள் சுமக்கவில்லையே’ என்றேன்.
‘கடவுள், உலகம் சுமப்பதுத் தெரியாமல் சுமக்க வேண்டும்’, என்றார்.
‘யாருக்குத் தெரியாமல்?’ என்றேன்.
‘கடவுளுக்கே தெரியாமல்’, என்றார்.
‘அதெப்படி’, என்றேன்.
வாரியணைத்துக் கொண்டார்.
‘மகளே!
கடவுளுக்கு நிறைய நண்பர்கள் உண்டு, எந்த ஒருவரும் உற்றவர் அல்ல;
கடவுளுக்கு நிறைய வலிகள் உண்டு, எந்த ஒரு வலியும் சிறியதோ, பெரியதோ அல்ல;
கடவுளுக்கு நிறைய காயங்கள் உண்டு, எந்த ஒரு காயத்துக்கும் மருந்து இல்லை;
கடவுளுக்கு நிறைய கோபங்கள் உண்டு, எந்த ஒரு கோபமும் சலனப் படுத்துவது இல்லை;
கடவுளுக்கு நிறைய வேலைகள் உண்டு, எந்த வேலையும் முழுக்கக் கவனம் ஈர்ப்பது இல்லை;
கடவுள் எல்லாம் இருந்தும், ஏதுமற்று இருத்தல் வேண்டும்’, என்றார்.
நான் வியந்து, ‘இது எவ்வாறு சாத்தியம்?’ என்றேன்.
‘உனககுள் இருக்கும் உன்னைத் துற’, என்றார்.
‘நானே ஒரு தனித் தீவு, எனக்குள் நானா?’ என்றேன்.
‘நீ தீவல்ல, தீவாகிக் கொண்டாய்’, என்றார்.
‘நான் தீவல்லாவிடில், நான் யார்?’ என்றேன்
‘நீ ஒரு பெரிய சமுத்திரம்’ என்றார்.
அதிர்ச்சியானேன்!
‘நீ சமுத்திரத்தின் ஒரு துளி’ என்றார்.
‘சமுத்திரமா? சமுத்திரத்தின் துளியா?’ என்றேன்.
‘இரண்டும்’ என்றார்.
மீண்டும் அதிர்ச்சி!
‘எப்படி?’ என்றேன்.
‘உனக்குள் இருக்கும் சமுத்திரம் உலகெங்கும் வியாபித்து இருக்கிறது’ என்றார்.
இப்பொது மேலும் குழப்பம்:
‘எனக்குள் சமுத்திரமா? நான் சமுத்திரமா? நான் சமுத்திரத்தின் துளியா?’ என்றேன்?
‘நான்’ அழிந்தால் சமுத்திரம், சமுத்திரமாகவே இருக்கும். துளியாகவோ, உள்ளாகவோ இராது’, என்றார்.
அயர்ச்சியாய் இருந்தது.
‘எவ்வாறு என்னை அழிப்பது?’ என்றேன்.
‘அன்பால்’, என்றார்!
‘அன்பால் ஆக்கத் தானே முடியும், எப்படி அழிப்பது’ என்றேன்.
‘அன்பு இருளை அழிக்க வல்லது’ என்றார்.
‘இங்கு இருள் எங்கிருந்து வந்தது’ என்றேன்.
‘உனக்குள் இருக்கும் நீ தான் இருள்’, என்றார்.
‘இருள் விலக என்ன செய்ய வேண்டும்?’ என்றேன்.
‘அமைதியாகக் காத்திரு’ என்றார்.
‘எவ்வளவு நேரம்?’ என்றேன்.
‘நீ கடவுள் என்பதை உணராமல், கடவுள் ஆகும் வரை’ என்றார்.
‘அது எப்படி புரிந்துக் கொள்வது’ என்றேன்
‘அதனைப் புரிதல் அவசியம் அற்றது’ என்றார்.
எனக்குப் பிடிபடவில்லை,
ஆனாலும், காத்துக் கொண்டிருக்கிறேன்.