புளிப்பு என்றொரு சுவை- மனிதன் நிர்ணயித்த சுவை,
எனினும்,
புளியில் ஒரு புளிப்பு;
மாங்காயில் ஒரு புளிப்பு;
நெல்லியில் ஒரு புளிப்பு;
எலுமிச்சையில் ஒரு புளிப்பு;
நார்த்தையில் ஒரு புளிப்பு;
திராட்சையில் ஒரு புளிப்பு
என வகையாய்ப் புளிப்பு வைத்து
மஞ்சள் என்றொரு நிறம்- மனிதன் பெயரிட்ட நிறம்
எனினும்,
மஞ்சளில் ஒரு மஞ்சள்;
தேனில் ஒரு மஞ்சள்;
பழங்களில் ஒரு மஞ்சள்;
தங்கம் ஒரு மஞ்சள்;
இளங்காலை மஞ்சள்;
முதிர்ந்த இலையின் மஞ்சள்
என வகையாய் மஞ்சள் வைத்து
ரசித்து ரசித்து உலகைப் படைத்த இறைவன் ஒரு
தேர்ந்த ரசிகனே!
எனினும், இத்தனையும் படைத்து மனிதனையும் படைத்தானே?!
No comments:
Post a Comment