Friday, December 28, 2018

தாயை மிஞ்சிய தனையன்


சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளுதல் என் பால்யத்தின் பெருங்கனவு. தூக்கத்தில் எல்லாம்  வீட்டில் இருக்கும் யாரோ ஒருவருடைய அவசர தேவையைத் தீர்ப்பதற்கு வேகமாக சைக்கிளில் போவதுப் போன்ற கனவு அடிக்கடி வரும். ஆனால், சைக்கிள் ஓட்டுவதற்கான தைரியம் வந்ததே இல்லை. அதை தொட்டாலே ஒரு பதற்றம் தொற்றிக் கொள்ளும்.
ஆறாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு விடுமுறையின்போது எங்கள் கிராமத்துக்குப் போயிருந்தப்போது எங்கள் அத்தைப்பையன் சொல்லிக்கொடுக்க எவ்வளவோ முயற்சி செய்தார். கடைசியில், உனக்கு சைக்கிள் ஓட்ட யாராலும் சொல்லித்தர முடியாது என்று சொல்லி சைக்கிளோடு என்னைக் கீழே சாத்திவிட்டுக் கோபமாக போய்விட்டார். அவர் ரொம்ப நல்லவர் தான், நான் தான் அவ்வளவு படுத்தி எடுத்திருக்கிறேன். 

அப்புறம் அதைக் கற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பமும் அமையவில்லை, நானும் பெரிதாய் ஆர்வம் காண்பிக்கவில்லை. XII படிக்கும்போது ஒரு சித்தப்பா சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். எங்களோடது கூட்டுக்குடும்பம் – வீடே hostel மாதரி தான். பெரிய குடும்பம். தீனிப் போட்டு school க்கு அனுப்புவதே பெருங்காரியம். எதுவுமே என்னோடது என்று சொந்தம் கொள்ள முடியாது அந்த வீட்டில். ஒரே sketchbox-ஐ எட்டு  பேர் பகிர்ந்துக்கொள்வோம். அப்படி இருக்கும்போது school யில் இருந்து வீட்டுக்கு வந்தவுடனே விளக்கு முன்னாடி இருந்து ஒரு சாவி எடுத்துக் கொடுத்து, ‘உனக்காக சைக்கிள் வாங்கினேன்’ னு சித்தப்பா சொன்னவுடனே பெருமை தாங்கவில்லை. இதுக்காக எப்படியாவது சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. ஓட்டக் கற்றுக்கொண்டேன், ஆனால் கால் எடுத்துப்போட்டு start பண்ணத் தெரியாது. XII படிதத்தால், இதுக்கென்று நேரமும் செலவளிக்க முடியவில்லை. சைக்கிள் ஓட்டிகொண்டு school க்கு போகிற மாதிரி கனவு மட்டும் நிற்கவே இல்லை. XII உம் முடிச்சு, college போய்விட்டேன். அப்புறம் பத்து வருடம் hostel, அப்புறம் கல்யாணம்.
கல்யாணத்துக்கு அப்புறம் Pulau Ubin போனப்போது, paired சைக்கிள் எடுத்து பின்னாடி உட்கார்ந்து சமாளித்தோம். ஆனாலும், சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும் என்ற தீராத கனவு தொடர்ந்தது.

பையன் பிறந்து 3 வயதில் அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தோம். side wheel ஓட. அப்போது, எனக்கு side wheel ஓட சைக்கிள் வாங்கலாம் னு தெய்வம் சொன்னதும் கடுமையான ரோஷம். 80 வெள்ளிக்கு SG50 சைக்கிள் ஒன்று வாங்கி, ஒரே வாரத்தில் மூச்சி முட்டி, கீழ விழாம ஓட்டக் கற்றுக்கொண்டேன். 37 வயதில்.
பையனோட சைக்கிளில் இருந்து side wheel போன ஞாயிற்றுக் கிழமை கழட்டினோம். அன்று முழுவதும் பெடல் போடாம, காலை இழுத்து இழுத்து ஓட்டினான். ஒரே புலம்பல். ‘அம்மா, நான் எவ்ளோ try பண்ணியும் வரவே மாட்டேங்குது, எனக்கு தெரியவே தெரியாதா? நான் ஒட்டீரவே மாட்டேனா’ னு. திங்கட்கிழமை காலையிலே பல் விளக்கறதுக்கு முன்னாடியே lift வரைக்கும் காலை இழுத்து இழுத்து, ஒரு round போய்விட்டு வந்தான். ஒரு மணி நேரத்தில் சல்லுன்னு ஓட்ட ஆரம்பித்தான். செவ்வாய்க்கிழமை கால் எடுத்துப் போட்டு அவனாக start பண்ணி ஓட்ட ஆரம்பித்தான். பெருமை வேறு. ஒரு வாரமாக சைக்கிள் புராணம் தான். வீட்டை விட்டு கெஞ்சிக் கூப்பிட்டாலும் கிளம்பமாட்டான், இப்போ காலையிலேர்ந்து gap விடாம சைக்கிள் ஓட்ட கீழே தான் சுற்றுகிறான். ‘எனக்கு கொஞ்சம் தான் தெரியும், இன்னும் million things கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அப்பப்போ ஒரு declaration. அந்த சிறு மூளைக்குள்ள என்ன தான் ஓடுது என்று ஒரே ஆர்வமா இருக்கிறது.
தாயை மிஞ்சிய தனையன் இது!

No comments:

Post a Comment