நாயொன்று வளர்த்தேன்,
நான் அன்றாடங்காட்சியை இருந்ததிலிருந்து;
Tiger யென பெயரிட்டேன்
என் இளமை முழுக்க அதன் மீது தீராத அன்பு கொண்டேன்;
அதற்கு பாலூட்ட, எலும்பு வாங்க, சோறிட என
களைப்பில்லாமல் உழைத்தேன்;
நித்தமும் அதன் வாழ்வை பற்றியே யோசித்தேன்,
இளமை காலம் மொத்தமும் அதன் நினைப்பில்
கழித்தேன்...
கல்யாணத்திற்குப் பெண் பார்த்தனர்,
“Tiger ஐ கவனித்துக் கொள்ள வேண்டும்”,
என்பது மட்டுமே என் நிபந்தனை!
அவளும் உழைத்தாள், Tiger கு
உடை தைத்தோம்,
சோறிட நல்ல தட்டு வாங்கினோம்,
ரேஷன் அரிசி பொன்னி அரிசி ஆயிற்று,
நாட்டுகோழி வாங்கி எங்களுக்கு 2 துண்டுகள்
Tiger கு 2 துண்டுகள் என பிரித்துக் கொண்டோம்,
Tiger குரைப்பதைப் பார்த்து நாங்கள் இருவரும்
அகமகிழ்ந்தோம்,
அதுவும் எங்களை மகிழ்விப்பதற்காகவே குரைக்கும்;
மகிழ்வாய் இருந்தோம்.
அன்றொருநாள், Tiger உருமுவதற்குப் பழகியது,
விளையாட்டாய் சிரித்துக்கொண்டோம்.
இப்போதெல்லாம் Tiger குறைப்பதில்லை.
உறுமிக்கொண்டே இருக்கிறது,
தன்னை புலியாகவே நினைத்துக் கொள்கிறது,
நாய் என்பதை மறந்து!
No comments:
Post a Comment