Wednesday, July 1, 2020

As we become them....

அவர்களுக்கும் ஒரு வாழ்வு இருந்தது
அவர்களுக்குள்ளும் பல ஆசை இருந்தது,
அவர்களுக்குள்ளும் நிறைய பாசம் இருந்தது
அவர்களும் நிறைய நடந்தார்கள்
அவர்களும் நிறைய பேசினார்கள்
அவர்களும் நிறையை கற்றார்கள்
அவர்களும் நிறைய செய்தார்கள்
அவர்களும் நிறைய புதிய முயற்சிகள் மேற்கொண்டார்கள்
அவர்களும் நிறைய உறவுகள் ஏற்படுத்திப் பாதுகாத்தார்கள்
அவர்களும் ரகசியங்கள் பாதுகாத்தார்கள்

அவர்களும் நிறைய உறவுகளை முறித்தார்கள்
அவர்களுக்குள்ளும் நிறைய கோபம் இருந்தது
அவர்களுக்குள்ளும் நிறைய அவமானம் இருந்தது
அவர்களுக்குள்ளும் நிறைய வேதனை இருந்தது
அவர்களுக்குள்ளும் நிறைய பச்சாதாபம் இருந்தது
அவர்களும் தேவையற்ற காரியங்கள் செய்தார்கள்
அவர்களுக்குள்ளும் பகைவர்கள் இருந்தார்கள்

பின்பொரு நாள் அவர்கள் இல்லாமல் போனார்கள்
அப்போது அவர்களைப் பற்றிப்  பேசினார்கள்
அவர்களும் சிலருக்கு ஆசையானார்கள்
அந்த சிலரின் வாழ்வு, ஆசை, பாசம், பேச்சு, கற்றல், செய்கை
முயற்சிகள், உறவுகள், கோபம், அவமானம், வேதனை, உருமாறினப் பின்பு
அவர்களின் அனைத்தும் மறக்கப் பட்டன.

இந்த வாழ்வு தான் பெருங்கனவாம்!

No comments:

Post a Comment