காலையின் வீட்டு நிரல்களை முடித்துவிட்டு,
வேலைக்குக் கிளம்புகையில் அழுதான்
என் 2 வயது மகன்.
“சீக்கிரமாக வந்துவிடுகிறேன் கண்ணா,” என
சமாதானமாகாத அவனை,
சமரசம் செய்து ஏமாற்றி வந்தேன்.
பேருந்து பயணம் முழுக்க அவனின் அழுகை ஆக்கிரமித்தது.
வேலைக்குக் கிளம்புகையில் அழுதான்
என் 2 வயது மகன்.
“சீக்கிரமாக வந்துவிடுகிறேன் கண்ணா,” என
சமாதானமாகாத அவனை,
சமரசம் செய்து ஏமாற்றி வந்தேன்.
பேருந்து பயணம் முழுக்க அவனின் அழுகை ஆக்கிரமித்தது.
அலுவகத்திலோ:
என் நாட்காட்டி நிரல்களைப் பின்பற்றி,
இடைவேளை, சாயந்திரம், முன்னிரவு என
காலத்தோடு சுழன்று
என் தோளைப் பற்றியிருக்கும் வேலைப்பளுவை
உதறித்தள்ளி வீடு திரும்பினேன்.
இப்படியே நித்தமும்:
தேவையற்ற பொருள் குவிக்கத் தேவையான நேரம் அழித்து,
எண்ணங்களும் உணர்வுகளும் மகனைச் சுழல,
உடலும் அறிவும் அலுவலகம் சுழல,
சிதறிய கண்ணாடித் துண்டுகளாக ‘நான்’ எனும் பிம்பம்!
என் நாட்காட்டி நிரல்களைப் பின்பற்றி,
இடைவேளை, சாயந்திரம், முன்னிரவு என
காலத்தோடு சுழன்று
என் தோளைப் பற்றியிருக்கும் வேலைப்பளுவை
உதறித்தள்ளி வீடு திரும்பினேன்.
இப்படியே நித்தமும்:
தேவையற்ற பொருள் குவிக்கத் தேவையான நேரம் அழித்து,
எண்ணங்களும் உணர்வுகளும் மகனைச் சுழல,
உடலும் அறிவும் அலுவலகம் சுழல,
சிதறிய கண்ணாடித் துண்டுகளாக ‘நான்’ எனும் பிம்பம்!
No comments:
Post a Comment