Friday, April 18, 2025

உயிரில் துளிர்த்த உணர்வே

 நா அசையா உயிரில் துளிர்த்து,
என் மழலையைச் சீராக்கி,
ஈரடியில் வாழ்வைப் பயிற்றுவித்து,
என் மனவெளியைத் தளைக்கச்செய்த
உன் மீதேறி வலம் வருகிறேன் நான்:
கற்றக் கைமண்ணைக் கொண்டு,
கருமம் எண்ணித் துணிந்து,
யாவரையும் கேளீராக்கி,
அகமும் புறமும் துடைத்து,
நித்தமும் புத்தடைந்து!
என் நா தொடங்கி, நாழி துளைத்து,
(என்) நாதம் ஆன என் தமிழே!
உன் ஆதி அறியோம்!
அந்தமும் அற்று வாழ்வாங்கு வாழிய நீ!

No comments:

Post a Comment