Thursday, June 10, 2021

Education system in TN

ஆங்கிலவழியோ, தாய்மொழிவழியோ, நம் கல்விமுறை ஆராய்ச்சிக்கு உகந்ததாக இல்லை. நம்முள் அந்த ஆர்வத்தை உண்டாக்க பெற்றோர்களும் முயல்வதில்லை. ஆராய்ச்சிக்கான அடிப்படை தேவை கேள்வி கேட்டல். ஆனால் நம் கல்விமுறை நம்மை கேள்விகளுக்கு பதில் சொல்பவர்களாக மட்டுமே தயார்படுத்துகிறது. அடுத்து, அக்கேள்விகளைத் தொடர்ந்து போய், அதற்கான விடைகளை கண்டறிதல் மற்றும் சுயமாய் சிந்தித்தல்- நம் கல்விமுறையோ நம்மை மூச்சடைக்க நம் நேரத்தைத் தின்று குவித்து சொல்பேச்சுக் கேட்கும் திறனை மட்டுமே ஊக்குவிக்கிறது. 

அதன் அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால், நாம் இன்னுமே ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய கல்விமுறையை மே பின்பற்றுகிறோம். ஆங்கிலேயர்களோ அவர்களுக்குத் தேவையான திறன்களைத்தானே பயிற்றுவிக்க முனைந்திருப்பார்கள்? அவர்களுடைய Cambridge கல்விமுறையை (1858 ல் அதற்கான தேர்வு முறை வரையறுக்கப்பட்டுள்ளது) ஏன் இந்தியாவில் நிறுவவில்லை? ஏனெனில், அவர்கள் இந்தியாவை தங்களுக்கான உழைக்கும் சந்தையாகத்தான் பார்த்தார்கள். அதற்கு தேவையான திறன்களில் பயிற்சிக்கப்படவே நம் கல்விமுறை நிறுவப்பட்டது. நாம் இன்றளவும் அதே கவ்விமுறையைத்தழுவியே பயிற்றுவிக்கிறோம். இதனையே பின்பற்றுவோமானால், நாம் மேலைய நாடுகளின் gaps ஐ நிறப்புவோமே ஒழிய, நம்மால் என்றுமே நல்ல ஆராய்ச்சியில் கோலோச்சமுடியாது. 

மொழி ஒரு medium. கல்வியைத் தாய்மொழியில் வழங்குவதன் மூலம் நாம் புரிந்துணர்வும் அப்பாடத்தின் மீதான மற்றும் நம்மை கற்க உற்சாகமூட்டும். ஆராய்ச்சிக்கட்டுரைகளைக்கூட தாய்மொழியில் எழுதி translator tools மூலம் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடலாம். முதல் தலைமுறை கற்றலில் இதனை சிந்திக்கும் நிலையில் நாம் இல்லை- ஏதோ ஒரு கல்விக்கற்று வெளியேறுவது மட்டுமே நம் நோக்கமாயிருந்ததில் குறையில்லை. இனியும் இதனைத்தொடரக்கூடாது. நம்  சூழலுக்கேற்ப ஆராய்ச்சி செய்வதற்கானத் திறனை வளர்க்கும் முறையை வரையறுக்கவேண்டும்.

No comments:

Post a Comment