Friday, June 5, 2026

மழைத்துளி...வனைதல்

ஒற்றைத் துளி மழையின் 
கணம் தாளாமல் 
கைவிடுகிறது இலை;

மழையோ,
கீழிறங்கி,
மண்ணில் 
புதைந்து,
கரைந்து,
வேர்களின் வழியே 
மேலேறுகிறது:
இலைகளுக்குப்
புத்துணர்வாய்!

அவர்கள்,
உன்னை எப்படிக் கைவிட்டார்கள் என்பதல்ல;
நீ,
உன்னை என்னவாக வனைந்தாய் என்பதுவே!

No comments:

Post a Comment