என்னோடு பிறக்கறாய்:
பெருங்கூட்டமான
உலகத்துடன் உறவாடிக்
களித்திருக்கையில்,
அறிமுகமான உலகை அறிய
அழகானத் துணை நீ!
பெருங்கூட்டமான
உலகத்துடன் உறவாடிக்
களித்திருக்கையில்,
அறிமுகமான உலகை அறிய
அழகானத் துணை நீ!
என்னோடு நடக்கிறாய்:
நாம் இருவரும்
வெளி, அண்டம் என
உலா வருகிறோம்:
என்னை நான் உணர
அருமையான கருவி நீ!
என்னோடே வாழ்கிறாய்:
அன்பு, பகை, துரோகம்,
மகிழ்வு, துக்கம், நிராகரிப்பு
பயணிக்கிறோம் நாம்:
என்னை நான் வார்ப்பிக்க
அரவணைக்கும் தாயானாய் நீ!
மனமே! உன் வழியே என் அனுபவங்கள்;
உன் நட்பின் பிம்பத்திலேயே உலகைக் காண்கிறேன்!
No comments:
Post a Comment