சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: பிரபஞ்சன்
மயிலிறகால் வருடும் சிறுகதைகள். ப்ரபஞ்சனுடைய சொற்களைக் கடன் வாங்கி சொல்வதானால் , "மழைக்காற்று மாதிரி நிலைபெற்றுப் போன குளிர்ச்சி'.
22 சிறுகதைகள். என்ன எழுத்துக்கள்? எங்கும் வியாபித்திருக்கும் எதிர்மறை கருத்துக்கள்/நிகழ்வுகளுக்கு மத்தியில், ஒரு மனிதனால் இவ்வளவு முத்துக்களை எழுத முடிந்தது என்பதே மிகவும் ஆச்சர்யம். எனக்கே நினைவுக்கூர்வதற்காக என்னை மிகவும் மிகவும் ஈர்த்த 5 சிறுகதைகளை மட்டும் சுருக்கமாக எழுத விழைகிறேன். Just adding a brief summary here, will edit in detail later.
- அந்த மனிதர்: சிறிய ஹோட்டல் உரிமையாளர் அப்பா. பள்ளி மாணவன். தோழர்கள் மௌத் ஆர்கன் வாங்கி, பழகி, தெருவில் இருக்கும் ஒரே பெண்ணை ஈர்க்க, தனக்கும் ஒரு மௌத் ஆர்கன் வேண்டும் என்பதால் அப்பாவிடம் கேட்கிறான் -தயங்கி, தயங்கி. இந்த இடத்திலேயே, அந்த சிறுவனுக்கும், அப்பாவுக்குமான உறவினை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். பையன் தன்னை அவமானப்படுத்தியப்பின்பும் சிறிதும் வெறுப்படையாமல் அவனை செயலால் மன்னிக்கும் தகப்பன்.
- வாசனை: எதிர்த்தவீட்டு மாமி, புல்லின் விவரணை.
- அபஸ்வரம்; நண்பனின் துரோகத்திற்குப் பின்பும் அவனது மனைவியை மரியாதையாக, பழைய உறவை கலைக்காமல் பாலம் அமைத்தப்பாங்கு.
- அப்பாவுக்குத் தெரியும்: தங்கையின் மகளை, தன் வீட்டில் சகல சுதந்திரமும் கொடுத்து, அவளுக்கு நிராகரிக்கும் உரிமையும் அளித்து, without enforcing obligated gratitude, அவளை மதிக்கும் ஓர் குடும்பம்.
- அமரத்துவம் -பள்ளித்தலம் அமைத்துப் பெற்ற மகளைப் பறிகொடுத்தார் பின்னும் அசராமல் பள்ளி நடத்தின ஆசிரியர்.
No comments:
Post a Comment