Tuesday, October 29, 2019

சுபிட்ச முருகன்

சுபிட்ச முருகன்: 'நான்' அழியும் வழியும், அழிவதற்கான வலிகளும்! A book of symbolisms. 

கையிலிருக்கும் வெண்ணையை அலட்சியப்படுத்திவிட்டு ஆசைகளுக்குத்தீனி போட ஆரம்பித்து அழிவை நோக்கி நகர்வோம் என்ற புத்தரின் வாக்கை காட்சிப்படுத்தி, பின் அதிலிருந்து விடுபட்டு, கைவிட்ட வெண்ணையைக் கைகொள்ள ஊனை உருக்கி, தன்னை உணர்ந்து, மெய்யை அறிந்து உருக வேண்டிய அவசியத்தை நிதர்சனமாக, நிர்வாணமாக பதிகிறது. பல இடங்களில் “Alchemist” புத்தகத்தை நினைவு கூர்ந்தேன்.

கதை நெடுக அடையாளங்கள். Although the first part is presented through அருவருக்கத்தக்க mortal sexual desires, it could also symbolize ANY HUMAN desire- power, greed, wealth and the so many, so many ugly ways man takes to satisfy these desires. நான்கு மதங்களின் அடையாளங்கள் கண்டேன் - ஆட்டுக்குட்டியை கையிலேந்தி நிற்கும் ஆடை கிழிந்த அவன், முருகனை தரிசிக்க மலை நோக்கி நடக்கும் பாதயாத்திரிகள், தர்காவில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் போக சொல்லல், மற்றும் கதை நெடுக கூடவே பயணிக்கும் புத்தர். எல்லாம் ஒன்றே பரம்பொருளே என! பாவத்தின் நீட்சிகளாக பாம்பும், நாயும். இன்னும் பல. 

எழுத்தாளன் சரவணன் சந்திரனை புத்தகம் முழுக்க எங்கும் காணவில்லை. இதற்கு முன்பு, நான் அவருடைய வாழ்வியல் கதைகளையே வாசித்துள்ளேன். தூக்கம் இழந்துள்ளேன். இந்த புத்தகம் ஆரம்பிக்கும் தளத்தைக் கொண்டு மீண்டும் தூக்கம் இழக்க நேரிடும் என நினைத்தேன். அனால், இறுதியில் பேரமைதி – எதுவாகவோ, அதுவாகவே! This is what all meditation techniques preach – to accept life as is! எதுவாகவோ, அதுவாகவே! 

பெருங்கதைக்குள் கிளைக்கதைகளைக் கோர்க்கும் கைவண்ணம் கூடி வந்திருக்கிறது – வேர்க்கதையின் ரசம் குறையாமல். போகிறபோக்கில் கோவில்களில் பெண்களைத் தொந்தரவு செய்பவர்களின் தந்திர யுக்திகளும், சிறுவயதில் காணும் காட்சிகளின் சுவடுகளும், வார்த்தைகள் ஏற்படுத்தும் ரணங்களும், தீண்டாமையின் தாக்கமும் கிளைக்கதைகளின் வாயிலாக தீண்டபட்டுள்ளன.  

Personally, for me, it has come at a right time – when I am quieting my’self’ after a hiatus of anxiety and stress. And the book did make me cry – esp., to know the cost of losing “myself”. But, no success is worth its salt without the arduous journey, and its comforting to know every cow has its own. உழுகிற மாட்டுக்கு ஒரு வலின்னா, கரவமாட்டுக்கு வேற வலி.

No comments:

Post a Comment