Monday, May 12, 2025

புது+அகம் = புத்தகம் :-)

 ஒற்றைக் கண்ணோடு, 
இருண்ட விடியல்களின்
வழிப்போக்கனாய் அலைந்தேன் நான்.
ஒலிகளின் வலித் தாளாமல்,
சொற்களின் மாளிகைக்குள் நுழைந்தேன்:
அங்கு...
ஒவ்வொரு கதவுக்கும் பல சாவிகள்;
ஒவ்வொரு சாவிக்கும் — ஒரு கண்!
அவை திறக்கத் திறக்கப்
பலக் கண்ணனாய் உருமாறினேன்.
ஓராயிரம் திசைகளில் வெளிச்சம் பாய்ந்தது,
மழைத் துளிகளாய் மனதினுள் விழுந்து,
அகத்தின் பாவங்களைக் கழுவியது.
என் உள்ளத்தின் வெளி விரிந்தது,
பனித்துளி படர்ந்தச் சுவரில் தோன்றும் எழுத்துகளைப் போல
எனக்குள் தடம் பதித்தன சொற்கள்!
நித்தமும் என் அகத்தைக் குளிர்வித்த
‘புது அகம்’ அளிக்கும் புத்தகங்கள்:
 பேரருளாளர்கள்!

No comments:

Post a Comment