Wednesday, June 25, 2025

நாள்

 19/11/97
அறிமுகப்படுத்தப்பட்ட
ஆண்டவனை வணங்கி கண்விழித்தேன்:
அறிமுகப்படுத்தியவர்கள் வசம் கட்டுண்ட
கூண்டுக் கிளியாய்!
சுமார் 11:30:
யாருமற்ற தனிமையில்
தாங்கொணா அழுத்தத்தின் தேடலில்,
புதிதாய் விழித்துக் கொண்டு,
என் கடவுளை உணர்ந்தேன்.
அன்று முதல்:
என் வானமும், என் வனமும் 
பெருவெளியாய் எனக்குள் விரிகிறது;
நானும், என் கடவுளும்
எனக்குள் நெடும் பயணம் செல்கிறோம்:
இலக்கற்று,
நிதானமாய், சுதந்திரமாய்,
உண்மைக்கு நெருக்கமாய்!

No comments:

Post a Comment