No hearing
No allowance for defence
Only a banging prosecution,
Loaded on me day after day;
Each day, I carry the nailed cross
- My spirit dragged by its weight
- My core beliefs duly challenged
- My identity a huge fleeting lie
You claim all that you did
Pray tell me:
How can I prove all that I had been
Leave alone all that I did?
Was my being a vanity,
Or was my doing a farce?
Love- the one with the peak value
Involving my soul;
You could have exploited lower things
And I wouldn’t have cared a damn!
குற்றச்சாட்டுகள்:
விசாரணை இல்லை
தற்காப்புக்கு அனுமதி இல்லை
ஒரு கொடூரமான வழக்கு மட்டுமே
நாள்தோறும் என் மீது சுமத்தப்படுகிறது;
நித்தமும்
வானத்தைவிட்டுப் பிரிந்த மேகத்தைப் போல
மூச்சடைத்து சிலுவையைச் சுமந்தலைகிறேன்:
என் அடிப்படை நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கி,
அடையாளமற்று வெற்றிடமாய்!
நீ எனக்குச் செய்த அனைத்தையும் பட்டியலிடுகிறாய்
நீ கூறு:
நான் செய்ததை விட்டுவிடு ,
நான் உனக்காக இருந்ததை எப்படி நிரூபிக்க?
என் இருப்பு ஒரு வீண் பெருமையா,
அல்லது நான் தான் வெறும் கேளிக்கையா?
நீ ஏமாற்ற என் பாசம் தானா உன் வாகனம்?
நான் எல்லாவற்றையும்விட மிக உயர்வாகக் கருதியிருந்த
ஆழத்தில் எல்லையற்ற உன்மேலான என் பாசம்;
நீ தாழ்ந்த என் உடலின் மேல் கூட குத்தியிருக்கலாம்
அல்லது என் உயிரையாவது மாய்த்திருக்கலாம்
நான் கொஞ்சமும் கவலைப்பட்டிருக்க மாட்டேன்!
No comments:
Post a Comment