உயர எழும்ப எத்தனித்து
பறவைகளைப் போல பறக்க
இறக்கையை விரிக்கிறேன்.
என் பறத்தல் தடைபடவே
தடையைத் தேடுகையில் உணர்கிறேன்:
நான் சுமந்தலைகிறேன்…
என் கசப்பின் எடையை,
என் வலியின் எடையை,
என் எண்ணங்களின் எடையை,
என் நியாயங்களின் எடையை,
என் வெறுப்புகளின் எடையை,
என் இயலாமையின் எடையை,
என் வெறுமையின் எடையை,
என் பொறாமையின் எடையை,
என் ஆற்றாமையின் எடையை!
ஓடு சுமக்கும் ஆமைகளைப் போலன்றி
ஒரே உதறலில் இறக்கி வைக்கக் கூடிய
இத்தனை எடைகளும் என்
அழகிய மகிழ்வின் பறத்தலுக்கு
இடைஞ்சல்களாகலாமோ?!
No comments:
Post a Comment