Friday, July 19, 2024

வெடிப்பு

 நிலம் உழுது, நீர் பாய்ச்சி
உரமிட்டு, விதைத்த நிலத்தில்
மண் துளைத்து எழாமல் பிடிவாதம் பிடிக்கும்
வெடிக்காத விதைகளுக்காக வருந்துகிறாள்
அக்கம்மா
தன் கால் வெடிப்புகளுடன்
 

No comments:

Post a Comment