Tuesday, July 9, 2024

ஆனந்தம்

 அவளுக்குத் தெரியும்
அவளை இப்படி நேசிக்க 
அவனால் மட்டுமே முடியும் என:
சிறு தொடுதல் இன்றி,
ஒரே பார்வையில் உருக்க,
அவள் அமைதியை சிலாகிக்க,
அவள் அவசியத்தை உணர்த்த,
அவனால் மட்டுமே முடியும்!
எல்லையற்றப் பொறுமையை
உள்ளடக்கி,
அவளை அவளாகவே நேசித்து;
அவளுக்கு அளிக்கும் பொருட்களில் அல்ல;
அவளுடன் கழிக்கும் நிசப்தப் பொழுதுகளில் 
எல்லா மொழிகளும் ஒன்றிணைந்து:
மௌனமே காதலாய் 
காதலே மௌனமாய்,
ஆனந்தப் பிரபஞ்சமாய்ப் பரிணமிக்கின்றன,
நிறங்கள் ஒன்றிணைந்து வெள்ளையாவது போல்!

No comments:

Post a Comment